ப்ரியங்கா சோப்ராவின் பிரதமர் ஆசை

பார்வையாளர்களின் விமர்சனம் ப்ரியங்கா சோப்ராவின் பிரதமர் ஆசை 0.00/5.00

பாலிவுட்டில் டாப் ஹீரோயினா இருக்குறவங்க பிரியங்கா சோப்ரா. தமிழில விஜய் கூட “தமிழன்” படத்தில நடிச்சாங்க. அப்புறம் ஹாலிவுட்டுக்கு போய் கலக்கிட்டு இருக்காங்க பிரியங்கா சோப்ரா. போன வருஷம் அவங்கள விட 10 வயசு குறைஞ்ச அமெரிக்க சிங்கர் நிக் ஜோன்சை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டாங்க. கல்யாண ரிஷப்சனுக்கு நேர்ல போய் மணமக்களை வாழ்த்திய நம்ம பிரதமர் நரேந்திர மோடி, தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்துல போட்டோ போட்டு வாழ்த்திருந்தாரு.


பிரதமர நேர்ல பார்த்து பிரம்மிச்ச பிரியங்கா ஒரு மீடியாவுக்கு கொடுத்த இண்டர்வியூல, எனக்கு இந்திய பிரதமரா ஆகணும்னு ஆசை இருக்கிறதா சொல்லிருந்தாரு. அதோட நிப்பாட்டிருந்தா பராவாயில்லங்க. என்னோட புருஷன் அமெரிக்க அதிபர் ஆகணும்னும் எட்டாக்கனிக்கு கொட்டாவி விட்டுருக்குறாங்க ப்ரியங்கா மேடம்!