நேசமணி கதாபாத்திரம் ஆண்டவன் தந்த பரிசு – வடிவேலு பெருமிதம்

பார்வையாளர்களின் விமர்சனம் நேசமணி கதாபாத்திரம் ஆண்டவன் தந்த பரிசு – வடிவேலு பெருமிதம் 0.00/5.00

தற்போது உலகம் முழுவதும் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது, #prayfornaesamani என்ற ஹாஸ்டக். இந்த ஹேஷ்டேக்கில் வலம் வரும் காட்சி வடிவேலு நடித்த பிரெண்ட்ஸ் படத்தின் காட்சியாகும். அதில் கான்ட்ராக்டர் நேசமணி கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருப்பார்.


இந்த ஹேஷ்டேக் எப்படி ட்ரெண்டிங் ஆனது என்றால் “வெளிநாட்டில் இருப்பவர் சுத்தியல் படத்தை சமூக வலைத்தளங்களில் போட்டு இதற்கு உங்க ஊரில் என்ன பெயர் என கேட்டிருந்தார். அதற்கு வேறு ஒருவர் இதற்கு பெயர் சுத்தியல். இதை வைத்து தட்டினால் டங் டங் என கேட்கும். இந்த சுத்தியலை நேசமணி தலையில் போட்டு விட்டார்கள்” என பதில் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மேற்காணும் ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வலம் வரத் தொடங்கி விட்டது.


இதற்கிடியே இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டிங் குறித்து நடிகர் வடிவேலு கருத்து தெரிவித்துள்ளார். அதில், நேசமணி போன்ற எனது கதாபாத்திரங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு என்பது ஆண்டவன் தந்த பரிசு என்று குறிப்பிட்டுள்ளார்.