உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடும் 92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா

Oscar Awards
பார்வையாளர்களின் விமர்சனம் உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடும் 92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா 0.00/5.00

சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக நட்சத்திரங்களே பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இன்று பிப்ரவரி 10 நடைபெற்றது.

முதலாவதாக கொரியன் படம் ‛பாராசைட் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றது. அதன் பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 1917 படம் 3 ஆஸ்கர் விருதுகளையும், ஜோக்கர் படம் 2 ஆஸ்கர் விருதுகளையும் வென்றது.

உலகளவில் சினிமா துறையில் மிகப்பெரிய கவுரவமாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. 2020க்கான விருதுகள், அமெரிக்காவின் லாஸ் ஏஞசல்ஸ் நகரில் 92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடடைபெற்றது.

விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரெட்கார்பட் நிகழ்ச்சி துவங்கியது. விழாவில் திரைப்பட நடிகர்கள், நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

ஜோக்கர், பாராசைட், 1917 உள்ளிட்ட 9 படங்கள் ஆஸ்கார் விருது பட்டியலுக்கு அதிகளவில் போட்டி கண்டன. கொரியன் படமான பாராசைட், சிறந்த படம், வெளிநாட்டு படம், திரைக்கதை மற்றும் இயக்குனர் என நான்கு விருதுகளை அள்ளியது. சிறந்த ஒலி, ஒளி மற்றும் விஷூவல் எபெக்ட்ஸ் ஆகிய 3 விருதுகள் 1917க்கு கிடைத்தன. சிறந்த நடிகராக ‛ஜோக்கர் படத்தில் நடித்த ஜாக்குயின் பீனிக்ஸூம், சிறந்த நடிகையாக ‛ஜூடி படத்திற்காக ரெனி ஜெல்வெகரும் வென்றனர்.

இதனையடுத்து ஆஸ்கார் விருது பட்டியலில் முழுவிபரம் பின்வருமாறு:
சிறந்த திரைப்படம் – Parasite,
சிறந்த இயக்குனர் – போங் ஜூன் ஹோ ( Parasite)
சிறந்த நடிகர் – ஜாக்குயின் பீனிக்ஸ் (Joker)
சிறந்த நடிகை – ரெனி ஜெல்வெகர் (Judy)
சிறந்த துணை நடிகர் – பிராட் பிட் (once upon a Time in hollywood)
சிறந்த துணை நடிகை – லாரா டெர்ன் (Marriage Story)
சிறந்த திரைக்கதை – Parasite
சிறந்த அனிமேஷன் திரைப்படம் – Toy story 4
சிறந்த தழுவல் திரைக்கதை – Jojo Rabbit
சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் – The Neighbors Window
சிறந்த ஆடை வடிவமைப்பு – ஜாக்குலின் துர்ரன் (Little Women)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – Once Upon a Time in Hollywood
சிறந்த ஆவணப்படம் – American Factory
சிறந்த ஒலிக்கலவை – 1917
சிறந்த சவுண்ட் எடிட்டிங் – Ford v Ferrari
சிறந்த ஒளிப்பதிவு – 1917
சிறந்த படத்தொகுப்பு – Ford V Ferrari
சிறந்த விஷூவல் எபக்ட்ஸ் – 1917
சிறந்த ஒப்பனை – Bombshell
சிறந்த பின்னணி இசை – ஹில்டர் (Joker)
சிறந்த பாடல் – Rocketman
சிறந்த வெளிநாட்டு திரைப்படம் – Parasite

#BestActor #Joker #Oscars #BestPicture #BestDirector #JoaquinPhoenix #Parasite #BradPitt #OnceUponATimeInHollywood #Eminem #Flixwood #oscars #oscar2020 #oscars2020 #Oscars2020live #oscarsredcarpet #OscarSunday #oscars20 #OscarsTNT #StromCiara