சொகுசு கார் வாங்கிய சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்

பார்வையாளர்களின் விமர்சனம் சொகுசு கார் வாங்கிய சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர் 0.00/5.00

தமிழில் சில படங்கள் நடித்தும், மலையாளத்தில் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் பிரித்விராஜ். இவர் சமீபத்தில் ரூ.1.64 கோடி மதிப்பில் உள்ள சொகுசு காரை வாங்கியுள்ளார். இதனால் இவர் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அந்த காரை பதிவு செய்வதற்காக கொச்சி மோட்டார் போக்குவரத்துத் துறையிடம் ஆன் -லைனில் பதிவு செய்திருந்தார். அந்த பதிவில் 1.34 கோடி என பதிவு செய்திருந்தார். அப்போது காரின் விலையை குறைத்தது போக்குவரத்து துறையினருக்கு தெரிய வந்து சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

ஆனால் உண்மையான மதிப்பு 1.64 கோடி என்பது மோட்டார் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்து விட்டனர். விலையை குறைத்து காட்டியபோது முதலில் 42 லட்சத்து 42 ஆயிரம் வரி கட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 9.54 லட்சம் கூடுதலாக வரி கட்டினால் மட்டுமே காரை பதிவு செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து நடிகர் பிரித்விராஜ் கூடுதலாக 9 லட்சத்து 54 ஆயிரத்து 350 கட்டினார். பின்னர் கொச்சி மோட்டார் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் காரை பதிவு செய்து கொடுத்தனர்.