நடிக்க மாட்டேன்னு நான் சொல்லவில்லை – நஸ்ரியா

nazriya
பார்வையாளர்களின் விமர்சனம் நடிக்க மாட்டேன்னு நான் சொல்லவில்லை – நஸ்ரியா 0.00/5.00

தமிழில் ராஜா ராணி படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை நஸ்ரியா. இவர் திருமணத்துக்கு பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்த நஸ்ரியா திடீரென்று நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதுவும் நஸ்ரியா தனது கணவர் பகத் பாசிலுடன் டிரான்ஸ் என்ற மலையாள படத்தில் இணைந்து நடிக்கிறார். மீண்டும் நடிக்க வந்தது குறித்து நஸ்ரியாவிடம் கேட்ட போது,

நஸ்ரியா நான் கல்யாணத்திற்க்கு பிறகு ஒரு படத்தில் தான் நடித்தேன் தற்போது பகத் பாசிலுடன் இணைந்து டிரான்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறேன். நடிப்பதை நிறுத்தியது ஏன் என்று கேட்கிறார்கள். நான் நடிப்பதை நிறுத்திவிட்டதாக யாரிடமும் நான் சொல்லவில்லை. மேலும் அப்படி ஒரு எண்ணமும் எனக்கு இல்லை என கூறியுள்ளார். பின்னர் கதையும் கதாபாத்திரமும் பிடித்தால் மட்டுமே நடிக்கிறேன்’ என்றார்.