நாகார்ஜுனா வழங்கும் ஸ்ரீதேவி, ரேகாவிற்கு நாகேஸ்வரராவ் விருது

பார்வையாளர்களின் விமர்சனம் நாகார்ஜுனா வழங்கும் ஸ்ரீதேவி, ரேகாவிற்கு நாகேஸ்வரராவ் விருது 0.00/5.00


பாலிவுட் நடிகைகள் ரேகா மற்றும் மறைந்த ஸ்ரீதேவி ஆகியோருக்கு நாகேஷ்வரராவ் விருது வழங்கப்படவுள்ளதாக தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.

இதற்கான அறிவிப்பை நேற்று இரவு வெளியிட்ட நாகார்ஜுனா, மறைந்த நடிகை ஸ்ரீதேவி பாலிவுட்டின் ஐகானாகத் திகழ்ந்தவர் என்றும் நடிகை ரேகா என்றென்றும் இளமையாகவே நடித்து வருபவர் என்றும் கூறினார். இதற்கான விழா வரும் நவம்பர் 17-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் நாகார்ஜுனா தனது தந்தையும் ஆந்திராவின் புகழ்பெற்ற நடிகரும் தயாரிப்பாளருமான மறைந்த அக்கினேனி நாகேஸ்வரராவ் பெயரில் தனது குடும்பத்தாருடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் திரைத்துறையில் நீண்ட பங்களிப்பு செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகின்றார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகைகள் ரேகா மற்றும் மறைந்த ஸ்ரீதேவி ஆகியோருக்கு நாகேஸ்வரராவ் விருது வழங்கப்படுவதாக தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.