இயக்குநராக அறிமுகமாகும் இசையமைப்பாளர் தர்புகா சிவா

பார்வையாளர்களின் விமர்சனம் இயக்குநராக அறிமுகமாகும் இசையமைப்பாளர் தர்புகா சிவா 0.00/5.00

இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்திற்கு இசையமைத்திருந்த தர்புகா சிவா தற்போது இயக்குநராக அறிமுகமாகிறார்.

சசிக்குமார் நடிப்பில் வெளியான ‘கிடாரி’, ‘பலே வெள்ளைய தேவா’ ஆகிய திரைப்படங்களுக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்நிலையில் சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பரத் ராம் மற்றும் தீபா ஐயர் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைத்து தர்புக சிவா இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்களை ஒன்றன் பின் ஒன்றாக படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது இப்படத்தின் தலைப்பு ‘முதல் நீ முடிவும் நீ’ என்பது குறிப்பிடத்தக்கது.