பணம் தரலைன்னா சும்மா விட மாட்டேன் – மீரா மிதுன்

பார்வையாளர்களின் விமர்சனம் பணம் தரலைன்னா சும்மா விட மாட்டேன் – மீரா மிதுன் 0.00/5.00

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக இதுவரை 10 பைசா கூட பணம் தரவில்லை என விஜய் டிவியை கடுமையாகச் சாடியுள்ளார் நடிகை மீரா மிதுன்.

‘பிக் பாஸ் சீசன் 3’ நிகழ்ச்சி முடிவடைந்து விட்டாலும், சர்ச்சைகள் தொடர்கதையாகி வருகிறது. இந்த சீசனின் வெற்றியாளராக முகின் ராவ் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சி முடிந்து 40 நாட்களைக் கடந்துவிட்டாலும், சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன், நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோதும், நிகழ்ச்சி முடிந்த பின்னரும் பல்வேறு சர்ச்சைக்குரிய வகையில் நடந்து வருகிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் தனக்கு சேர வேண்டிய தொகையை விஜய் தொலைக்காட்சி இன்னும் வழங்கவில்லை என்றும். தனக்குரிய தொகையை வழங்கவில்லை என்றால் ஒரு கோடி நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்வேன் என்றும் மீராமிதுன் கூறியுள்ளார்.