இணையத்தில் மாஸாக வைரலாகும் விஜய் – மாளவிகா மோகனன் புகைப்படம்

Vijay Malavika Mohanan
பார்வையாளர்களின் விமர்சனம் இணையத்தில் மாஸாக வைரலாகும் விஜய் – மாளவிகா மோகனன் புகைப்படம் 0.00/5.00


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்துவரும் படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் மற்றும் ஆண்ட்ரியா, சாந்தனு உட்பட பலர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா என பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது சென்னையில் நடக்கிறது.

இப்படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதியுடன் விஜய் மற்றும் மாளவிகா மோகனன் மோதும் சண்டை காட்சிகள் உள்ளதாம். இந்த சண்டை காட்சிக்காக நடிகை மாளவிகா மோகனனுக்கு பிரத்யேக சண்டை பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் விஜய் -மாளவிகா மோகனன் இருவரும் அருகருகே உட்கார்ந்து கொண்டு பேசி கொண்டிருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் விஜய் மீசை மற்றும் தாடியை டிரிம் செய்ததுடன் இருக்கிறார்.