மாடர்ன் உடையை தூக்கி எறிந்துவிட்டு புடவைக்கு மாறிய மாளவிகா மோகனன்

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தளபதியின் ஆஸ்தான ரசிகரான சாந்தனு போன்றோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் பல முன்னணி நடிகைகளில் பெயர்கள் அடிபட்டது. ஆனால் கடைசியாக தளபதி விஜய்க்கு பேட்டப்படத்தின் நாயகி மாளவிகா மோகனன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் யார் என ரசிகர்கள் தெரிந்துக்கொண்டர். மாளவிகா மோகனன் மலையாளம், கன்னடம், இந்தி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். இவர் கவர்ச்சியாக பல புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் புடவை கட்டி நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. அதனால் தளபதி ரசிகர்கள் மாஸ்டர் படத்தை தூக்கி நிறுத்த இவர் போதும் என கூறியுள்ளனர்.