மாயநதி அபி சரவணனுக்கு flixwood.com வழங்கிய “சோஷியல் ஸ்டார்” பட்டம்

பார்வையாளர்களின் விமர்சனம் மாயநதி அபி சரவணனுக்கு flixwood.com வழங்கிய “சோஷியல் ஸ்டார்” பட்டம் 0.00/5.00


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரும், சமூக நிகழ்வுகளில் ஈடுபட்டு வரும் நடிகர் அபி சரவணன் பிறந்த நாள் தினத்தன்று flixwood நிறுவனம் சார்பாக சோஷியல் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

கேரளா நாட்டிளம் பெண்களுடனே’ படம் மூலம் கதாநாயகனான அறிமுகமான நடிகர் அபி சரவணன் தொடர்ந்து டூரிங் டாக்கீஸ், பட்டதாரி உள்ளிட்ட படங்களில் நடித்த அபி சரவணன் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டம், நெடுவாசல் மீத்தேன் போராட்டம், விவசாயிகள் போராட்டம் என அனைத்து சமூக நிகழ்வுகளில் காட்டிவரும் அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வும் திரையுலகினரிடமும் மக்களிடமும் இவரை இன்னும் நெருக்கமாக்கி விட்டன.

இவர் சமீபத்தில் நடித்த மாயநதி திரைப்படம் அனைவரின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இதில் வெண்பா நாயகியாக நடித்திருந்தார். இப்படத்தை விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பார்த்து அபி சரவணனுக்கு வாழ்த்து கூறியிருந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் தனது பிறந்த நாளை கொண்டாடிய அபி சரவணனுக்கு வாழ்த்துக்களும் விருதுகளும் குவிந்தன. Flixwood.Com நிறுவனம் “சோஷியல் ஸ்டார்” எனும் பட்டத்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கையால் வழங்கினர். இதையடுத்து அபிசரவணன் நடிகரும் இயக்குநருமான மனோபாலாவிடம் சோஷியல் ஸ்டார் பட்டத்தினை பெற்றார்.

அதேபோல் மதுரையில் நடைபெற்ற ரேடியோ ஒன் விருது நிகழ்வில் ‘மதுரை சிட்டிசன் 2020’ எனும் விருது வழங்கப்பட்டது .ரேடியோ ஒன் விருது வழங்கும் அதே நாளில் மாயநதி திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றதால் அந்த விருதை அவர் சார்பாக அவரின் சகோதரி பெற்றுக்கொண்டார்.

அவர் அடுத்ததாக கொம்பு வச்ச சிங்கம்டா, சாயம் மற்றும் இன்னும் பெயரிடப்படாத 5 படங்கள் என இந்த வருடம் முதல் பிஸியாக இருக்கும் அபி சரவணன் மேலும் பல வெற்றிப்படங்களை கொடுத்து சாதனை படைக்க Flixwood சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.