தோனியின் ஓய்வு குறித்து லதா மங்கேஷ்கர் வேண்டுகோள்!


இந்தியா – நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 18 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது. எம்எஸ் தோனி கடைசி வரை நின்று வெற்றிக்காக போராடினார். ஆனால் 50 ரன்கள் எடுத்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார்.


இந்தியா வெளியேறியதால் தோனி ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் புகழ் வாய்ந்த பாடகி லதா மங்கேஷ்கர் உணர்ச்சிப்பூர்வமான மெசேஜ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


லதா மங்கேஷ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நீங்கள் ஓய்வு பெற விரும்புகிறீர்கள் என்ற செய்தியை கேட்டுக்கொண்டு இருக்கிறேன். தயவு செய்து அதுபோன்ற எண்ணம் வேண்டாம். நாட்டிற்கு நீங்கள் தேவை. ஓய்வு முடிவு பற்றி சிந்திக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.