கார்த்திக் சுப்புராஜ் படத்தில் கீர்த்திசுரேஷ்

பார்வையாளர்களின் விமர்சனம் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் கீர்த்திசுரேஷ் 0.00/5.00


கீர்த்திசுரேஷ் தமிழில் இந்தாண்டு எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை அதே நேரத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தி படம் ஒன்றில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.


இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் ஒரு படத்தில் கீர்த்திசுரேஷ் நடிக்க இருக்கிறார்.கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன்பெஞ்ச் ‘நிறுவனம் ஏற்கனவே ‘மேயாத மான்’ மற்றும் ‘மெர்க்குரி’ ஆகிய படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுவொரு நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையம்சம் கொண்ட படம் என்றும் கூறப்படுகிறது.அறிமுக இயக்குனர் ஈஸ்வர் என்பவர் இயக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.