டுவிட்டரில் தெறிக்க விடும் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியீடு

பார்வையாளர்களின் விமர்சனம் டுவிட்டரில் தெறிக்க விடும் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியீடு 0.00/5.00

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “தர்பார்” படத்தின் மோஷன் டீஸர் இன்று மாலை 5.30 மணிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளின் பிரபலங்களே மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 65வது பிறந்த நாள் விழாவை தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். தனது பிறந்த நாள் அன்று தர்பார் பட போஸ்டர் வெளியிடுவதால் ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரின் தர்பார் திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை மற்ற மொழி சூப்பர் ஸ்டார்கள் திறந்து வைப்பது இந்த படத்திற்கு மேலும் சிறப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத்தில் மோகன் லாலும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், ஹிந்தியில் சல்மான் கானும், தமிழில் கமல் ஹாசனும் மோஷன் போஸ்டரை வெளியிட்டிருப்பது சிறப்பான நிகழ்வாகும்.
#DarbarMotionPoster #DarbarThiruvizha #DarbarPongal #Flixwood