மோகன்லால் மகனை  காதலிக்கிறாரா கல்யாணி  ப்ரியதர்ஷன்…?

பார்வையாளர்களின் விமர்சனம் மோகன்லால் மகனை  காதலிக்கிறாரா கல்யாணி  ப்ரியதர்ஷன்…? 0.00/5.00

நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் “ஹலோ” என்ற தெலுங்கு படத்தின்  மூலம் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் சிம்புவுக்கு ஜோடியாக “மாநாடு” படத்தில் நடிக்க இருந்தார்.


அந்த படம் ட்ராப்பானது. இதனை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக “ஹீரோ” படத்தின் நடித்து வருகிறார். இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.


பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் மகளான கல்யாணி சமீபகாலமாக காதல் வலையில் விழுந்துள்ளதாக தெரிகிறது. அதாவது மலையாள நடிகர் மோகன்லால் மகன் பிரணவும், கல்யாணியும் சிறுவயது முதலே பழகி வருகின்றனர்.


இந்த பழக்கம் வாலிப வயதில் காதலாக மாறியிருப்பதாக தெரிகிறது. தற்போது ப்ரணாவும் சில படங்களில் நடித்து வருகிறார். மோகன்லால் குடும்பமும், ப்ரியதர்ஷன் குடும்பமும் அவ்வளவு நெருக்கம்.

பிரணவுடன் கல்யாணி


எனவே பிரணவ்வை காதலிக்கிறாரா கல்யாணி..? இதுகுறித்து அவர் மறைமுகமாக கூறுகையில், நான் ஒருவரை காதலிக்கிறேன். எதிர்காலத்தில் அவரை மணப்பேன். எங்கள் குடும்பத்தினருக்கு நான் யாரை காதலிக்கிறேன் என்று தெரியும். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. அவரது பெயரையும் மற்ற விவரங்களையும் இப்போதைக்கு சொல்ல மாட்டேன்’ என்று கூறியிருக்கிறார்.