ஜெயலலிதா வேடத்துக்கு நித்யா மேனன் தேர்வு!!

பார்வையாளர்களின் விமர்சனம் ஜெயலலிதா வேடத்துக்கு நித்யா மேனன் தேர்வு!! 0.00/5.00

பிரியதர்ஷினி டைரக்டர்  ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் அவரது வேடத்துக்கு நடிகை தேர்வு நடந்தது. பல நடிகைகளை பரிசீலித்தனர்.

இறுதியில் ஜெயலலிதாவாக நடிக்க நித்யா மேனன் தேர்வாகி இருக்கிறார்.  நித்யா மேனனை தேர்வு செய்தது குறித்து டைரக்டர் பிரியதர்ஷினி கூறியதாவது:–

ஜெயலலிதா வாழ்க்கை கதை படத்துக்கு ‘த அயன் லேடி’ என்று பெயர் வைத்துள்ளோம். ஜெயலலிதா வேடத்தில் நடிக்க அவரது குணநலன்களுடன் ஒத்துப்போகிற நடிகையை தேடினோம். நித்யாமேனன் பொருத்தமாக இருப்பார் என்று அவரை அணுகி கதை சொன்னோம். திரைக்கதை அவருக்கு பிடித்துப்போய் நடிக்க சம்மதித்து உள்ளார்.

சசிகலா வேடத்தில் நடிக்க வரலட்சுமி சரத்குமாரிடம் பேசி வருகிறோம். இதர நடிகர்–நடிகைகள் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. பிப்ரவரி மாதம் 24–ந்தேதி ஜெயலலிதா பிறந்த நாளில் படப்பிடிப்பை தொடங்குகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜெயலலிதா வாழ்க்கையை இயக்குனர்கள் பாரதிராஜா, ஏ.எல்.விஜய் ஆகியோரும் படமாக்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தன்னிடம் அனுமதி பெறாமல் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க கூடாது என்று அவரது அண்ணன் மகன் தீபக் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.