இசைஞானிக்கு ஹரிவராசனம் விருது – கேரள அரசு கௌரவிப்பு

பார்வையாளர்களின் விமர்சனம் இசைஞானிக்கு ஹரிவராசனம் விருது – கேரள அரசு கௌரவிப்பு 0.00/5.00


இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு கேரள அரசு ஹரிவராசனம் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

மதநல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக கேரள அரசு ஒவ்வொரு ஆண்டும் ஹரிவராசனம் என்ற விருதை வழங்கி வருகிறது. இந்த விருதில் ரூ.1 லட்சம் ரொக்கம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும்.

இந்நிலையில் இந்த ஆண்டு இசைஞானி இளையராஜாவிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சபரிமலை சன்னிதானத்தில் வைத்து இதற்கான நிகழ்ச்சி நடப்பட்து. இதில் இளையராஜாவை பல்லக்கில் அழைத்து வந்து பட்டம் வழங்கப்பட்டது.

இந்த விருதினை இதற்கு முன்னர் ஜேசுதாஸ், கங்கை அமரன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா, பி.சுசீலா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.