வடிவேலுவுடனான மீம்ஸிற்கு பதிலடி கொடுத்த ராஷ்மிகா

பார்வையாளர்களின் விமர்சனம் வடிவேலுவுடனான மீம்ஸிற்கு பதிலடி கொடுத்த ராஷ்மிகா 0.00/5.00


காமெடி நடிகர் வடிவேலுவுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் வெளியான மீம்ஸ்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது தமிழில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் சுல்தான் படத்தில் நடிக்கிறார்.

ரஷ்மிகா இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது அவருடை போட்டோ ஷூட் படங்களை வெளியிட்டு வருவார். அதில் வித்தியாசமான முகபாவனைகள் செய்திருப்பார்.

இதனைக் கண்ட நெட்டிசன்கள் இவரது போட்டோக்களை வைத்து, அதே முகபானையில் உள்ள வடிவேலுவின் காமெடி போட்டோக்களுடன் சேர்த்து மீம்ஸ் உருவாக்கி வெளியிட்டனர். இந்த மீஸ்கள் தற்போது வைரலாகின.

இந்த மீம்ஸ்களை பார்த்த ராஷ்மிகா மந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், ’இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. வடிவேலு சார் ரொம்ப க்யூட்டாக இருக்கிறார். ’என்று பதிவிட்டுள்ளார்.

Previous articleமீண்டும் அஜித்துடன் இணையும் யோகி பாபு
Next articleDharala Prabhu – Official Trailer