எருமை சாணி விஜய் இயக்கும் உண்மை சம்பவ படம்


இணையத்தில் மீம்ஸ் கிரியேட் செய்வதற்கென்றே பல யூடியுப் சேனல்கள் இருக்கின்றன. இதில் பலர் வெற்றியும் கண்டு முன்னணி நிறுவனங்களாக தொடர்கின்றனர். அவற்றில் ஒன்றான எருமை சாணி என்ற யூடியுப் சேனலுக்கு இலட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். அதில் எருமைச்சாணி விஜய் மற்றும் ஹரிதாவுக்கு ஆதரவு குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எருமை சாணி விஜய் சமீபகாலமாக ஒரு சிலபடங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது அவர் புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளன. கல்லூரி மாணவர்கள் சம்பந்தப்பட்ட கதை என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கல்லூரி மாணவராக அருள்நிதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படத்தின் கதையை கேட்டதும் அருள்நிதி ஒப்புக் கொண்டதாக தெரியவருகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.