சிவராத்தியை முன்னிட்டு குலதெய்வ கோவிலில் தனுஷ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்


நேற்று மஹாசிவராத்தியை முன்னிட்டு தனுஷ் தனது ரசிகர்களுக்கு சிவராத்திரி வாழ்த்து தெரிவித்திருந்தார். குடும்பத்தினருடன் குலதெய்வ சாமி கும்பிட தனுஷ், தனது சொந்த ஊரான தேனி அருகில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.

தனுசுடன் அவரது மனைவி ஐஸ்வர்யா, அப்பா கஸ்தூரி ராஜா, அம்மா விஜயலட்சுமி மற்றும் தனுஷின் 2 மகன்களும் உடன் சென்றிருந்தனர். தனுஷ் குடும்பம் கோவிலுக்கு வருவதை அறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலைச் சுற்றி பெரும் திரளாக ஒன்று கூடினர். கோவிலில் தனுஷ் அவரது குடும்பத்தினருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் தற்போது கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். திருநெல்வேலி பகுதி கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு ஜாதி கலவரத்தை மையமாக வைத்து படம் தயாராகுவதால் ஓரு குறிப்பிட்ட சமூகத்தினர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Previous articleAnirudh Ravichander Recent Photos
Next articleமாளவிகா ஷர்மாவின் அழகிய புகைப்படங்கள்