புகழின் உச்சிக்கே சென்றாலும் தமிழ் மீதான பற்று குறையாது! ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி

பார்வையாளர்களின் விமர்சனம் புகழின் உச்சிக்கே சென்றாலும் தமிழ் மீதான பற்று குறையாது! ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி 0.00/5.00

உலகப்புகழ் பெற்று நான் எவ்வளவு உயரமாக சென்றாலும் தமிழை மறக்காமல் இருப்பதற்கு காரணம் ரசிகர்கள் மட்டுமே என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

1992ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். அதன்பிறகு தமிழ், இந்தி, ஆங்கிலம் என ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்கும் அளவிற்கு இசைத்தொழிலில் கொடிபறக்கிறார். இவர் கோல்டன் குளோப் விருது, பாப்டா விருது, தேசிய திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளை பெற்றுள்ளார்.

ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம்டாக் மில்லினியர் என்ற ஆங்கில படத்தில் இசையமைத்ததற்காக 2 ஆஸ்கார் விருதுகளையும் ஏ.ஆர்.ரகுமான் வென்றிருக்கிறார். ஆஸ்கார் விருது மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர வார்த்தையை அங்கே உச்சரித்து தமிழனின் பெருமையை உலகெங்கும் புகழச் செய்தவர்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து குறித்து பேசுகையில், என் இசையில் 50 சதவீதம் வைரமுத்துவின் தமிழ் இருக்கிறது என்றும் அதற்கான மரியாதை எப்போதும் உண்டு எனவும் நான் மீண்டும் வைரமுத்துவுடன் இணைவேனா என்பதை பின்னர் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

நான் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், தமிழை மறக்காமல் இருப்பதற்கு ரசிகர்களின் அன்பு மட்டுமே காரணம் என்று ரஹ்மான் நெகிழ்ச்சியுடன் கூறினார்.