ஒரே நைட்ல இவ்ளோ பண்ண முடியுமா? பிகில் நடிகை பாராட்டு

பார்வையாளர்களின் விமர்சனம் ஒரே நைட்ல இவ்ளோ பண்ண முடியுமா? பிகில் நடிகை பாராட்டு 0.00/5.00

தீபாவளி ரிலீசாக விஜய் நடித்த பிகில், கார்த்திக் நடித்த கைதி ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. இதில் கைதி படத்தில் கதாநாயகி, பாடல்கள், நகைச்சுவை என எவுதும் இல்லாமல் ஓர் இரவில் நடக்கும் த்ரில்லர் ஆக்சன் களமாக வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றது.

விஜய், நயன்தாரா நடிப்பில் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவான படம் பிகில். இவை கமர்ஷியல் படமாக வெளிவந்தது. இந்த படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் கால்பந்து வீராங்கணையான இந்துஜா நடித்திருந்தார். பிகில் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. இந்நிலையில் கைதி படக்குழுவினரை பிகில் நடிகை இந்துஜா வெகுவாக பாராட்டியுள்ளார்.

தனித்துவமான மேக்கிங் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ள கார்த்தி, ஓர் இரவில் நடக்கும் காட்சிகளை விறுவிறுப்பாக நடத்திக் கொண்டு போக உதவிய தயாரிப்பாளர் என ஒட்டுமொத்த படக்குழுவினர்களும் படத்தை மிரட்டியுள்ளனர். படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிளிர்கிறது. கைதி படத்தின் படக்குழுவினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் என்று ட்விட்டரில் இந்துஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.