இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் அதிர்ஷ்டசாலி யார்..?

பார்வையாளர்களின் விமர்சனம் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் அதிர்ஷ்டசாலி யார்..? 0.00/5.00

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தினமும் ஒரு சுவாரஸ்யத்துடன் நடைபெற்று வருகிறது. வார இறுதியில் ஒருவர் வெளியேற்றப்படுகிறார். கடைசியாக நடிகை கஸ்தூரி வெளியேற்றப்பட்டார்.


இதனை தொடர்ந்து இந்த வாரம் கவின், முகின், லாஸ்லியா, ஷெரின் மற்றும் சேரன் ஆகிய 5 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஐந்து பேர்களில் கவின், முகின், லாஸ்லியா ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று இந்த வாரம் வெளியேறாமல் தப்பித்து உள்ளனர்.


ஆனால், ஷெரின் மற்றும் சேரன் ஆகியோர் சம அளவில் வாக்குகளை பெற்றுள்ளனர். இந்த இருவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார். 


இந்நிலையில், வனிதாவுடன் ஷெரின் மோதும் காட்சியால் ஷெரின் மீது அனுதாப ஓட்டுகள் விழும் வாய்ப்புகள் இருந்தது. அதன்படி இவருக்கு விழுந்த அனுதாப ஓட்டுகளால் சேரனை விட அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.


அதனால், இந்த வார இறுதியில் இயக்குனர் சேரன் வெளியேற்றப்படலாம்.