பிரபல நடிகருக்கு வில்லனாகிறார் பரத்

பார்வையாளர்களின் விமர்சனம் பிரபல நடிகருக்கு வில்லனாகிறார் பரத் 0.00/5.00

நடிகர் பரத், ஷங்கர் இயக்கிய ‘ பாய்ஸ்’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அடுத்து அடுத்து வெயில்,காதல் பட்டியல் 555, வானம் என பல படங்களில் நடித்து  ரசிகர்கள் கூட்டத்தை உருவாகினார்.


இருப்பினும் சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைய தொடங்கியது. அவர் நடிப்பில் வெளியான படங்களும் சரியாக ஓடவில்லை. தற்போது அவருக்கு தமிழ் மற்றும் மலையாளத்தில் இரண்டு படங்களில் நடிக்க உள்ளார்.


இந்நிலையில் பரத், ராதே என்னும் இந்தி படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை பிரபுதேவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கிறார். பரத் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் சல்மான் கான்னுடன் நடிக்க வேண்டும் என்பது மிக பெரிய கனவு என பதிவிட்டுள்ளார்.