தந்தையின் கனவை நிறைவேற்றிய பேபி மானஸ்வி

Baby Manasvi
பார்வையாளர்களின் விமர்சனம் தந்தையின் கனவை நிறைவேற்றிய பேபி மானஸ்வி 0.00/5.00

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகனாக நடித்து வருபவர் கொட்டாச்சி. முன்னணி காமெடி நடிகர்களுடன் நடித்து வரும் கொட்டாச்சி, தனி காமெடியனாக அவரால் வரமுடியவில்லை.

தற்போது கொட்டாச்சியின் மகள் மானஸ்வி பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். இவர் இமைக்காக நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். அதன்பிறகு நிறைய படவாய்ப்புகள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் கொட்டாச்சி தற்போது புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். சொந்த வீடு வாங்க வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசை என்றும், அந்த கனவை தனது மகள் நிறைவேற்றி விட்டதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.