என்னுடைய இந்த நிலைக்கு விஜய் தான் காரணம்! கண் கலங்கும் அருண் விஜய்!!

பார்வையாளர்களின் விமர்சனம் என்னுடைய இந்த நிலைக்கு விஜய் தான் காரணம்! கண் கலங்கும் அருண் விஜய்!! 0.00/5.00

முன்னணி நடிகரான அருண் விஜய் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். அவர் நினைத்து போல சினிமா வாழ்க்கை இல்லாத போது அவருடைய விடாமுயற்சியால், முன்னணி நடிகராக வலம் வருகிறார்.  


தற்போது அருண் விஜய், அடுத்ததாக பாக்ஸர், மாபியா, சினம், அக்கினிச் சிறகுகள் என பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் பேட்டி ஒன்று அளித்தார்.


பேட்டியில் அவர் சொல்லியது:- தான் சினிமாவில் நடிகராக திணறிய போது சினிமா தயாரிப்பாளராக மாறி முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுங்கள் என்று குடும்பத்தில் இருப்பவர்களே சொன்னார்கள். அதனால் நடிகர் விஜய்யை சந்தித்து பேச சொன்றேன். “ஏன் இப்படி ஒரு முடிவை எடுக்கிறீர்கள். நல்லா நடிக்கிறீங்க, லவ்லி டான்சர், சண்டை போடுறீங்க. தொடர்ந்து நடிங்கள் நிறுத்திடாதீங்க” என்று கூறினார் விஜய்