அனுராக் காஷ்யப் பாராட்டிய திரில்லர் மூவி மியூசிக் டைரக்டர்

பார்வையாளர்களின் விமர்சனம் அனுராக் காஷ்யப் பாராட்டிய திரில்லர் மூவி மியூசிக் டைரக்டர் 0.00/5.00

இப்பலாம் தமிழ் சினிமாவுல கிரைம்,திரில்லர் மாதிரி படங்கள் அதிகமா வந்துட்டே இருக்கு. இந்த மாதிரி படங்களுக்கு மியூசிக் ரொம்ப முக்கியம். அந்த வகையில மாயா, நரகாசூரன், இறவாக்காலம், கேம் ஓவர், ஒப்பம்,னு வரிசையா திரில்லர் மூவிஸ் பேக்ரௌண்ட் மியூசிக்கு நல்ல பேர் கிடைச்சிருக்கு.


இந்த படங்களோட மியூசிக் டைரக்டர் ரான் ஈத்தன் யோகன் திரில்லர் படத்துக்கு மியூசிக் கம்போஸ் பண்றத பத்தி ஒரு பேட்டில சொன்னப்போ, நான் மியூசிக் பேம்லில இருந்து வந்தவன். என் முதல் மூவியான மாயாவுக்கு கிடைச்ச ரெஸ்பான்ஸ் தான் எனக்கு வரிசையா திரில்லர் படமா வந்துட்டு இருக்கு. நான் எல்லா வகை படத்துக்கும் மியூசிக் கம்போஸ் பண்ண ஆசைப்படுறேன்.


மாயா ஷூட்டிங் ஸ்பாட்ல நயன்தாராவ பாத்தேன். அவங்க என் மியூசிக்க கேட்டு ஆச்சர்ய பட்டாங்க. இப்போ கேம் ஓவர் படத்த இந்தியில அனுராக் காஷ்யப் ரிலீஸ் பன்றாரு. அவர் என் படத்த பார்த்துட்டு, மியூசிக் மட்டுமில்லாம படத்தோட எல்லா தொழில் நுட்பங்களையும் பாராட்டிருக்காரு.