பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாகும் அஞ்சலி

அங்காடித் தெரு படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அஞ்சலி. அங்காடித் தெரு படத்தின் வெற்றிக்கு பிறகு கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக மாறிய அஞ்சலி, ஜெய், விமல், ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக ஒப்பந்தமானார்.

சமீபத்தில் இவர் நடித்த நாடோடிகள் 2 படமும் நல்ல விமர்சனங்களை பெற்றது, இவரது நடிப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்பு இல்லாத இவர் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை போயபட்டி ஸ்ரீனு இயக்க உள்ளார். மேலும் 59 வயதாகும் நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக 33 வயதாகும் நடிகை அஞ்சலி நடிக்க உள்ளார். அஞ்சலிக்கு முன் நடிகை நயன்தாரா மற்றும் அனுஷ்காவை நடிக்க வைக்க ஏற்பாடு செய்ததாகவும், ஆனால், அவர்கள் படங்களில் பிசியாக இருப்பதால் தற்போது அஞ்சலியை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.