சால்ட்-அண்ட் பெப்பர் லுக்கை மாற்றிய தல!

பார்வையாளர்களின் விமர்சனம் சால்ட்-அண்ட் பெப்பர் லுக்கை மாற்றிய தல! 0.00/5.00நடிகர் அஜித் நடிப்பில் வெளியானது ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரித்தார். அதில் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து, போனி கபூரின் பேவ்யூ புராஜக்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் ‘தல 60’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அதிரடி ஆக்க்ஷன் திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், விமான நிலையத்தில், தனது வழக்கமான சால்ட்-அண்ட் பெப்பர் லுக்கில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக, க்ளீன் ஷேவ் செய்து கருமையான முடியுடன், கோட் சூட் அணிந்து வந்த அஜித்குமாரை பார்த்து அவரது ரசிகர்கள் உற்சாகமாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர். 

#ajith #newgetup #thala60 #police