ஹீரோயின் ஆவேன்னு நான் நினைச்சதே இல்லை-பூர்ணா

பார்வையாளர்களின் விமர்சனம் ஹீரோயின் ஆவேன்னு நான் நினைச்சதே இல்லை-பூர்ணா 0.00/5.00

கொடி வீரன் படங்களில் நாயகியாக நடித்தவர் பூர்ணா. இவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-


’நடக்கிறது, நடக்கப்போறது, நடந்தது… எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்டது. சினிமாவில் நடிப்பேன், ஹீரோயின் ஆவேன்னு நான் நினைச்சதே இல்லை. யாருடைய ஆதரவும் இல்லாமல்தான், இவ்வளவு தூரம் வந்திருக்கேன்.
என்னதான் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்னு அரசாங்கம் சொன்னாலும், என்னைத் தனியா ஒரு இடத்துக்கு அல்லது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அனுப்ப எங்க அம்மா பயப்படுவாங்க. என்கூடவே அம்மா வருவாங்க, இல்லைன்னா, எட்டு வருடமா எங்ககிட்ட வேலை பார்க்கிற அக்கா வருவாங்க.

ஏன்னா, இப்போ பெண்களுக்கு நடக்கிற வி‌ஷயங்களை பார்த்துட்டு அவங்களுக்கு ஒரு பயம். டான்ஸ் கிளாசுக்கு போனாக்கூட கண்டிப்பா யாராவது எனக்கு துணைக்கு வருவாங்க. சமூகத்துல பெண்களுக்கு நடக்கிற பல வி‌ஷயங்களால இப்படி யாரை நம்பலாம், நம்பக்கூடாதுன்னே தெரியல.


பெண்கள் வி‌ஷயத்துல தப்பு பண்றவங்களுக்கு சரியான தண்டனை கொடுத்துட்டா, தப்பு நடக்காது. அப்போ, தவறுகள் குறையும். பெண்களும் பயப்படாம வெளியே போகலாம். வெளிநாடுகளில் கடுமையான தண்டைகள் கொடுக்கிறாங்க. நம்ம நாட்டுல அப்படியில்லை’. இவ்வாறு அவர் கூறினார்.