காதல் அனுபவங்கள் பற்றி சொன்ன அதிதி ராவ்

பார்வையாளர்களின் விமர்சனம் காதல் அனுபவங்கள் பற்றி சொன்ன அதிதி ராவ் 0.00/5.00

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் அறிமுகமானவர் அதிதி ராவ்.அதை தொடர்ந்து செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார்.தற்போது உதயநிதி ஸ்டாலின் வைத்து மிஸ்கின் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் அதிதி ராவ்


தனது காதல் அனுபவங்கள் பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியது:-


நான் 5ம் வகுப்பு படித்தபோது எனக்கு முதன்முதலாக காதல் கடிதம் வந்தது. அப்பொழுது எனக்கு வெறும் 9 வயது தான். என் சீனியர் ஒருவர் இரண்டு பக்கங்கள் எழுதியிருந்தார். அந்த கடிதம் கிடைத்த வேகத்தில் என்னை போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டனர். அந்த கடிதத்தில் நான் ரொம்ப அழகாக உள்ளேன் என்று ஏதேதோ எழுதியிருந்தது.


வீட்டிற்கு சென்ற உடன் அம்மாவிடம் அந்த கடிதத்தை பெருமையாக காட்டினேன். எனக்கு 9 வயசு தானே. அதனால் அந்த கடிதம் பெரிதாக தெரியவில்லை. எனக்கு 21 வயதில் திருமணம் நடைபெற்றது. எனக்கு எப்படி டேட்டிங் செய்வது என்று தெரியவில்லை என நினைக்கிறேன். அதன் பிறகு படங்களில் நடிக்கத் துவங்கினேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.