அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் !! – டிரெண்டாகிய #HBDThalaAjith

பார்வையாளர்களின் விமர்சனம் அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் !! – டிரெண்டாகிய #HBDThalaAjith 0.00/5.00

அஜீத் 47வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். தல அஜித்துக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த காரணத்தால் #HBDThalaAjith என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.

நடிகர் சதீஷ் :

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜீத் சார். கடின உழைப்பாளிகளுக்கு சிறந்த இன்ஸ்பிரேஷன் என்று நடிகர் சதீஷ் வாழ்த்தியுள்ளார்.

 

அனைவருக்கும் உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள். அஜீத் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், வளத்துடனும் வாழ ராகவேந்திரா சாமியை பிரார்த்திக்கின்றேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் ட்வீட்டியுள்ளார்.

 

நடிகர்  நிவின் பாலி

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல என்று நடிகர் நிவின் பாலி ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இமான்

தங்க மனசுக்காரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் படத்தில் வேலை செய்வது மகிழ்ச்சி. விஸ்வாசத்தை நினைத்து மகிழ்ச்சியாகவும், த்ரில்லாகவும் உள்ளது என்கிறார் இசையமைப்பாளர் இமான்.

அமைச்சர் செங்கோட்டையன்

அஜீத் பிறந்தநாளுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்து தெரிவித்து ட்வீட்டியுள்ளார்.

மேலும் நூறு ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜீத்தை வாழ்த்தியுள்ளார்.

 

இயக்குனர் விக்னேஷ் சிவன்

மேலும் நூறு ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜீத்தை வாழ்த்தியுள்ளார்.