ஆடை படத்தைப் பாக்குறவன் சைக்கோ! அமலாப்பால் போட்ட அடுத்த குண்டு!!

பார்வையாளர்களின் விமர்சனம் ஆடை படத்தைப் பாக்குறவன் சைக்கோ! அமலாப்பால் போட்ட அடுத்த குண்டு!! 0.00/5.00


நடிகை அமலாபால் ஆடை என்ற பெயரில் புதுப்படம் ஒன்றில் நடித்தாலும் நடித்தார்… தினம் தினம் விதவிதமாக பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஆடை படத்தின் டீசரில் நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்த அமலாபாலுக்கு ஒருபுறம் எதிர்ப்பும், மறுபுறம் ஆதரவும் கிடைத்தது. படத்தின் டிரைலரும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது. அமலபால் லெஸ்பியன் கேரக்டரில் நடித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி ஆடைக்கு வலு சேர்த்தன.


இந்த நிலையில் அமலாபால் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஆடை படம் குறித்தும், சர்ச்சைகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதில் அளித்த அமலாபால் சிரித்துக் கொண்டே ஆடை படத்தைப் பார்த்து ஒருவன் தவறான வழிக்குப் போனால் அவன் சைக்கோவாகத்தான் இருக்க முடியும் என்றார்.


ஆபாசக் காட்சி குறித்த கேள்விக்கு, நான் நிர்வாணக் காட்சியில் நடித்ததால் பெண்கள் மீதான வன்முறை அதிகரிக்கும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இண்டர்னெட்டைத் திறந்தால் எக்கச்சக்க ஆபாச படங்கள் கிடைக்கும், என்று பளீச்சென பதில் சொல்லி நிருபர்களின் வாயை அடைத்தார் அமலாபால்.