மூணு கோடி சம்பளம் கேட்கும் சமந்தா!

பார்வையாளர்களின் விமர்சனம் மூணு கோடி சம்பளம் கேட்கும் சமந்தா! 0.00/5.00


தமிழ், கன்னடம், தெலுங்கு என் மும்மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்தார். தனது வசீகரப் புன்னகை, ரசிகர்களுக்குத் தேவையான கவர்ச்சி போன்ற சிறப்பம்சங்களால் தனது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பதாலோ என்னவோ, அம்மணி கேட்கும் சம்பளத்தைக் கொடுக்க தயாரிப்பாளர்கள் எளிதில் சம்மதித்து விடுகிறார்களாம்.

இதனை நன்றாகவே புரிந்து வைத்திருக்கும் சமந்தா, இப்போது தனது சம்பளத்தை மூன்று கோடி ரூபாயாக உயர்த்து விட்டாராம். தெலுங்கில் சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான ஓ பேபி என்ற படம் சூப்பர் ஹிட் ஆனதைத் தொடர்ந்துதான் இந்த அதிரடி சம்பள உயர்வை அறிவித்திருக்கிறாராம்.

இதுவரை ரூ.2 கோடி சம்பளம் பெற்று வந்த சமந்தா ஒரே ஹிட்டில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் உயர்த்தியிருப்பதைப் பார்த்து சக நடிகைகளே வாயைப் பிளக்கிறார்களாம்.


தமிழ் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவர் நம்ம லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. அம்மணி ஒரு படத்துக்கு ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்குறாங்க.