நான் ஹீரோ இல்லை- யோகிபாபு

பார்வையாளர்களின் விமர்சனம் நான் ஹீரோ இல்லை- யோகிபாபு 0.00/5.00


நடிகர் யோகிபாபு ‘பட்லர் பாலு’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகி இருந்தது. மேலும் யோகிபாபுவிற்கு நகைச்சுவை காட்சிகளுக்கான வசனங்களை இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் தான் எழுதி கொடுக்கிறார் என்றும் கூறப்பட்டது.இந்நிலையில் இது குறித்து யோகி பாபு, “தர்மபிரபு, கூர்கா என இரண்டு படங்களில் தான் கதையின் நாயகனாக நான் நடித்துள்ளேன். அதன்பின் தொடர்ந்து காமெடியனாகத் தான் பல படங்களில் நடித்து வருகிறேன். ‘பட்லர் பாலு’ என்ற படத்தில் காமெடியனாக எட்டு வருடங்களுக்கு முன்பு வெறும் நான்கு நாட்கள் மட்டும் தான் நடித்திருந்தேன். ஆனால் தற்போது நான் தான் அப்படத்தின் ஹீரோ என்பது போல் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் துளியும் உண்மை இல்லை.


மேலும் எனக்கு நகைச்சுவை சம்பந்தப்பட்ட வசனங்கள் யாரும் எழுதித்தருவதில்லை. இயக்குநர்கள் தரும் வசனங்களை என் ஸ்டைலுக்கு ஏற்றவாறு சிறிதாக மாற்றிக்கொள்கிறேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

#yogibabu #comedy #hero