கணவர் குடும்பத்தினருடன் கிராமத்தில் பொங்கல் கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த்

பார்வையாளர்களின் விமர்சனம் கணவர் குடும்பத்தினருடன் கிராமத்தில் பொங்கல் கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த் 0.00/5.00

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது கணவருடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்தின் இளைய மகளும் இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த், இரண்டாவதாக விசாகனை திருமணம் செய்து கொண்டார். பொங்கல் அன்று தனது குடும்பத்தினருடன் பொங்கலை கொண்டாடினார். பின்னர் பெற்றோருடன் ஆசி பெற்ற புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார்.

இந்நிலையில் விசாகனின் சொந்த ஊரான சூலூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தனது மனைவி செளந்தர்யா மகன் வேத் ஆகியோர்களுடன் கலந்து கொண்டார். பின்னர் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து பொங்கலை கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.