Primary Menu

Top Menu

ரஜினிக்கு வில்லியாக நயன்தாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தர்பார் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்றிருக்கும் இப்படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இப்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது, தர்பாரில் நயன்தாரா, ரஜினியின் ஜோடியாக நடிக்கவில்லையாம். தந்தை மகள் பாசத்தை மையமாக கொண்ட இப்படத்தில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார் எனவும், நயன்தாரா இந்த படத்தில் ரஜினிக்கு வில்லியாக அல்லது ஒரு முக்கியமான கேரக்டரில் நடிப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.