Primary Menu

Top Menu

முதன்முறையாக இரட்டை வேடத்தில் நயன்தாரா ! – ஐரா பர்ஸ்ட் லுக் போஸ்டர்

குறும்பட இயக்குனர் சர்ஜூன் இயக்கத்தில் உருவாகும் ஐரா என்ற படத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாரா தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கிறார். தொடர்ந்து பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

 

சமீபத்தில், இவரது நடிப்பில் கோலமாவு கோகிலா மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்துள்ளன.

 

இந்த நிலையில், மா மற்றும் லட்சுமி ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜூன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படம் நயன்தாராவுக்கு 63வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி வைரலாகியுள்ளது. இப்படத்திற்கு ஐரா என்று டைட்டில் வைத்துள்ளனர் படக்குழுவினர்.

 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. இதில், நயன்தாரா இரட்டை வேடங்களில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

 

தமிழ் சினிமாவில், நயன்தாரா இரட்டை வேடங்களில் நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

புராணத்தில் இந்திரனை சுமந்து செல்லும் ஐராவத வெள்ளை யானையின் சுருக்கம் தான் இந்த ஐரா.

 

இப்படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 25ம் தேதி திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இதற்கு முன்னதாக அறம் மற்றும் குலேபகாவலி ஆகிய படங்களை தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply