Primary Menu

Top Menu

சாய்பாபா பாடலுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான்…!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஷீரடி சாய்பாபா பற்றிய பக்திப் பாடல் ஒன்றிற்கு இசையமைத்துள்ளார். தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அந்தப்பாடல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் யு-டியூபில் வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்ப் பாடலை மஷுக் ரஹ்மான், ஏ.ஆர்.ரஹ்மான் எழுதியிருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி பாடல்களை பேலா ஷிண்டே, ஏஆர் ரஹ்மான் பாடியிருக்கிறார்கள்.


கன்னடத்திலும் இந்தப் பாடலை வெளியிடலாமே என ஒரு ரசிகர் டுவிட்டரில் கேட்டதற்கு, வேண்டுகோள் ஏற்கப்பட்டது என ஏ.ஆர்.ரஹ்மான் அந்த ரசிகருக்கு பதிலளித்திருக்கிறார். அதனால், விரைவில் கன்னடத்திலும் அந்தப் பாடலை எதிர்பார்க்கலாம்.