Primary Menu

Top Menu

“சர்கார்” சிங்கிள் டிராக் – படக்குழு அறிவிப்பு

நடிகர் விஜய் நடிக்கும் “சர்கார்” படத்தின் சிங்கிள் டிராக், வரும் 24-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியீடு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்’. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் துவங்கியிருக்கும் நிலையில், சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம்! படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று  காலை 11 மணிக்கு படநிறுவனம் அறிவித்தது.
தற்போது அந்த அறிவிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சர்கார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை செப்டம்பர் 24ம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 25ம் தேதி ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்த நாள் வருவதால், முதல் பாடலை ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க இருக்கிறார்கள்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு காலை 11 மணிக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அக்டோபர் 2ம் தேதி வெளியாக இருக்கிறது.

Leave a Reply