தேனியை தெறிக்கவிட்ட யாஷிகா…!

69

தற்போது தமிழ் சினிமாவில் இளைஞர்களுக்கு பிடித்த கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தின் மூலம் கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத  இடம் பெற்றார்.


அதன் பின், பிக்பாஸ்  நிகழ்ச்சியில் போட்டியாளராக  கலந்துகொண்டு அங்கும் கவர்ச்சியாக இருந்த யாஷிகா மிகவும் பிரபலமானார்.


தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களிலே நடித்து வரும் யாஷிகா, தேனி மாவட்டத்துக்கு “ஈஸி பை” கடை திறப்பு விழாவிற்கு  மிகவும் கவர்ச்சியாக சென்றுள்ளார்.


தேனியில் ரசிகர்கள் யாஷிகாவுடன் செல்பி எடுப்பதற்கு முண்டியடித்தனர். அந்த கடைக்கு குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்த யாஷிகா பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.