பிகிலுக்காக வெறிகொண்டு காத்திருக்கும் யாஷிகா..!

பார்வையாளர்களின் விமர்சனம் பிகிலுக்காக வெறிகொண்டு காத்திருக்கும் யாஷிகா..! 0.00/5.00

தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “பிகில்”. ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இதில், நயன்தாரா, சத்யராஜ், கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்னனர். 


இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.


அதில், ஒரு ரசிகர் “நடிகர் விஜய் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்” என கேட்டார். அதற்கு பதிலளித்த யாஷிகா, நேர்மறையான சிந்தனைகள் மட்டுமே உள்ளவர். மற்றவர்களின் திறமைகளையும் அறிவையும் பாராட்ட என்றுமே அவர் தவறியதில்லை. தளபதி விஜய் சார், பிகிலுக்காக வெறித்தனமாக காத்திருக்கிறேன்” என்றார்.