மருத நாயகத்தில் கமலுக்கு பதில் விக்ரம்…?

கமல்ஹாசன் இயக்கத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு உருவான படம் “மருதநாயகம்”. இப்படம் அன்றைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது.

சில பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இப்படத்தின் படபிடிப்பு நடைபெறவில்லை. தற்போது இப்படம் தடைபட்டு 20 வருடங்கள் ஆகியுள்ளது.

சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன், மருதநாயகம் படம் தயாராகும். எனக்கு அரசியல் பணிகள் இருப்பதால் மருதநாயகம் படத்தில் நான் இருக்க மாட்டேன். எனக்கு பதில் வேறு நடிகர் இருப்பார்” என்றார்.

இதில் கமல் நடிப்பதில்லை என்று உறுத்தியளித்துவிட்டார். எனவே இப்படத்தில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

மருதநாயகம் கதாபாத்திரம் விக்ரமுக்கு சரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது ஒரு வரலாற்று படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.