தமிழர்களின் எதிர்ப்பை மீறி நடிக்கும் விஜய்சேதுபதி…!

பார்வையாளர்களின் விமர்சனம் தமிழர்களின் எதிர்ப்பை மீறி நடிக்கும் விஜய்சேதுபதி…! 0.00/5.00

நடிகர் விஜய்சேதுபதி தற்போது தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அடுத்ததாக இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதாரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்தது.


இப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என்று இலங்கை தமிழர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் விஜய்சேதுபதி இதில் நடிக்கமாட்டார் என தகவல் வெளிவந்தது.


இதுகுறித்து விஜய்சேதுபதி கூறுகையில், “நான் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் பார்த்தது இல்லை. முரளிதரனிடமே இதை நேரில் சொன்னேன். இந்த படம் முழுக்க கிரிக்கெட்டை பற்றிய கதை அல்ல. அவரது வாழ்க்கையில் நடந்த முக்கிய விஷயங்கள் படத்தில் இருக்கும். என் மீது அன்பு வைத்துள்ள யாரையும் நான் இழக்க மாட்டேன்.

அதுபோன்ற ஒரு காட்சியும் படத்தில் இருக்காது. என்னை நேசிப்பவர்களை காயப்படுத்தும் சுயநலவாதியாக நான் இருக்க மாட்டேன். அதையும் மீறி யாரையாவது காயப்படுத்தினால் மன்னிப்பு கேட்கவும் தயங்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.