நான் நடிச்ச படத்த நானே பார்க்க என்ன இருக்கு? நிருபரை கிறுகிறுக்க வைத்த நடிகர்!!

பார்வையாளர்களின் விமர்சனம் நான் நடிச்ச படத்த நானே பார்க்க என்ன இருக்கு? நிருபரை கிறுகிறுக்க வைத்த நடிகர்!! 0.00/5.00

தெலுங்கில் விஜய்தேவர்கொண்ட நடித்த அர்ஜுன் ரெட்டி படத்தை இந்தியில் “கபீர் சிங்” என்ற பெயரில் சந்தீப் வங்கா ரீமேக் செய்து இயக்கியுள்ளார். இப்படம் வெளியாகி இந்தி திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்றது.


தற்போது விஜய்தேவர்கொண்ட “டியர் காம்ரேட்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.


இந்த படத்தின் புரோமோஷன்க்காக பெங்களூரு வந்த விஜய்தேர்கொண்டவிடம் “கபீர் சிங்” படம் பார்த்தீர்களா என செய்தியாளர் கேட்டதற்கு பதிலளித்த அவர், “கபிர் சிங் படத்தில் ஷாஹித் கபூர் சிறப்பாக நடித்துள்ளார். இது தவிர அந்த படத்தை பார்க்க ஒன்றும் இல்லை. எனக்கு கதை தெரியும், நான் அந்த கதையில் நடித்தேன். மீண்டும் எதற்கு பார்ப்பது”என்றார்.