“பிகில்” படத்தின் படப்பிடிப்பை முடித்த விஜய்…!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் “பிகில்”. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் சத்யராஜ், கதிர், விவேக், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.


இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், விஜய் இந்த படத்தின் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் நடித்து முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.


அடுத்தகட்டமாக இந்த படத்தின் புரோமோஷன் வேலைகள் தொடங்க இருக்கிறது. இப்படம் வரும் தீபாவளிக்கு உறுதியாக வெளியாகும் படக்குழு அறிவித்துள்ளது.


இதனை தொடர்ந்து விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.