அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் “நேர்கொண்ட பார்வை”. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக இந்தி நடிகை வித்யாபாலன் நடித்திருந்தார்.
தமிழ் படங்கள் பல படங்களை நிராகரித்து கடைசியாக அஜித்தின் “நேர்கொண்ட பார்வை” படத்தில் நடித்துள்ளார். அதுவும் மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கும் படம் என்பதால் இதில் நடித்துள்ளார்.
இதுகுறித்து வித்யாபாலன் கூறுகையில், ‘நேர்கொண்ட பார்வை படத்தில் கவுரவ வேடம் என்றாலும் நல்ல டீமுடன் பணியாற்றியது மறக்க முடியாது. அஜித், ரொம்பவும் எளிமையானவர். கபாலி வாய்ப்புதான் எனக்கு வந்தது. அந்த சமயத்தில் இந்தி படத்தில் பிசியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போனது.
ஆரம்பத்தில் மாதவனுடன் ரன் படத்தில் நடிக்க என்னைத்தான் கேட்டனர். டெஸ்ட் ஷூட்டிற்கு பிறகு நிராகரிக்கப் பட்டேன். மனசெல்லாம் படத்திலும் அதேபோல் நிராகரிக்கப் பட்டபோது வருத்தப்பட்டேன். இதயமே உடைந்து போனது. பின்னர் இந்தி சினிமாவில் அறிமுகமாகி எனது கேரியர் மாறியது’ என்றார்.