சூரியின் அப்பாவித்தனத்தை வைத்து ஹீரோவாக்க முயற்சி செய்யும்  வெற்றிமாறன்…!

64

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் மீண்டும் தனுஷை வைத்து “வடசென்னை 2” படத்தை இயக்க இருக்கிறார்.


இதனிடையில் காமெடி நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதுகுறித்து இயக்குனர் வெற்றிமாறன் கூறுகையில்,  நா.முத்துக்குமாரின் பட்டாம்பூச்சி விற்பவன் என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒரு கவிதையை அடிப்படையாகக் கொண்ட கதையை படமாக இயக்குகிறேன். இறந்துபோன ஒரு தாத்தாவின் இறுதிச் சடங்கு குறித்த கவிதை அது. நடிகர் சூரியிடம் ஒரு எளிமையும், அப்பாவித்தனமும் இயல்பிலேயே இருக்கிறது. அது இந்தக் கதைக்கு உதவும்” என்று வெற்றிமாறன் கூறியுள்ளார்.


இதனை முடித்ததும் இயக்குனர் வெற்றிமாறன் தனுஷை வைத்து “வடசென்னை 2” படத்தை இயக்க வாய்ப்பு இருக்கிறது.