“ராஜன் வகையறா”வான ” வடசென்னை 2″..!அப்செட்டான தனுஷ்.!

230

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் “அசுரன்”. இப்படத்தில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, கென் கருணாஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


இப்படத்தின் டப்பிங் பணியை தனுஷ் லண்டனில் பேசி முடித்துள்ளார். அதனால் இப்படம் அறிவித்த தேதியில் வெளியாக இருக்கிறது. அதாவது அக்டோபர் 4ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


இந்நிலையில், வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் இதற்கு முன் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் “வடசென்னை”. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

Image result for vadachennai rajan images


இந்த படத்தின் இரண்டாம் பாகம் கூடிய விரைவில் உருவாக இருப்பதாக படக்குழு அறிவித்தது. ஆனால் இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

இந்தியன் தாத்தாவுக்கு “பை பை”…! 


தற்போது இரண்டாம் பாகத்தில் முற்றிலும் அமீர் தான் முதன்மை கதாபாத்திரம் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதனால் இதனை “ராஜன் வகையறா” என்ற தலைப்பில்  வெப் சீரிஸாக உருவாக்க இயக்குனர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Related image


இதனிடையில், இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூரியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.