தம்பி ராமையா மகனின் “தண்ணி வண்டி”

பார்வையாளர்களின் விமர்சனம் தம்பி ராமையா மகனின் “தண்ணி வண்டி” 0.00/5.00

அறிமுக இயக்குனர் மாணிக்க வித்யா இயக்கத்தில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடித்து வரும் படம் “தண்ணி வண்டி”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக வில் அம்பு படத்தில் நடித்த சம்ஸ்கிருதி நடித்துள்ளார்.


இதுகுறித்து இயக்குனர் மாணிக்க வித்யா கூறுகையில், “தண்ணீர் பிரச்சினைக்கும் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, அடிப்படையில் நாயகன் மதுரையில் ஒரு தண்ணீர் சப்ளையர், அவர் ஒரு குடிகாரராகவும் இருக்கிறார். எனவே கதைக்கு இயல்பாக இரண்டுக்கும் பொருந்தும் வகையில் இந்த தலைப்பை வைத்தோம். அதே நேரத்தில் கதை, நீர் நெருக்கடியை பற்றியதும் அல்ல, எல்லா நேரத்திலும் நாயகன் மதுவுக்கு அடிமையானவராகவும் காட்டப்படவில்லை. இது நாயகனுக்கும், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட வருவாய் அதிகாரிக்கும் இடையிலான நகைச்சுவையான மோதலை சுற்றி நிகழும் கதை” என்றார்.